முகப்பு
நீலகிரி

"ஜனவரி 21ஆம் தேதி முதல் கள் இறக்கப்படும்'

வரும் ஜனவரி 21ஆம் தேதி முதல் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

வரும் ஜனவரி 21ஆம் தேதி முதல் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டது.  கள்ளில் கலப்படம் செய்ததாகவும்,  கள் குடித்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதாக் கூறியும் அரசு, கள்ளுக்குத் தடை விதித்தது.  
வரும் ஜனவரி 21ஆம் தேதி முதல் கள் இயக்க ஆதரவாளர்கள், அவரவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தென்னை மரங்களில் இருந்து அவரவர் பயன்பாட்டுக்குத் தேவையான கள் இறக்கிக் குடித்துக் கொள்வார்கள். இதன் மீது அரசு நடவடிக்கை எடுத்தால் அதை சட்டப்படி சந்திப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →