சேரங்கோடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் சேரங்கோடு ஊராட்சியில் இம்மாதம் 19 மற்றும் 29ஆம் தேதிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சேரங்கோடு ஊராட்சியில் இம்மாதம் 19 மற்றும் 29ஆம் தேதிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளிட்ட செய்தி:
நீலகிரி மாவட்டத்தில், 2017-18ஆம் ஆண்டுக்கான விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சேரங்கோடு ஊராட்சியில் 210 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய சேரங்கோடு ஊராட்சியில் இம்மாதம் 19 மற்றும் 29ஆம் தேதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும். எனவே, இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.