நீலகிரி

அனுமதி இன்றி இயக்கப்பட்ட பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

DIN

கோத்தகிரியில் சொகுசு விடுதிக்கு சாலை அமைக்கும் பணிக்காக அனுமதியில்லாமல் இயக்கப்பட்ட  பொக்லைன் இயந்திரத்தை  குன்னூர் கோட்டாட்சியர் கீதாபிரியா வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தார்.   
மலை மாவட்டமான நீலகிரியில் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தவும்,  ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தடை விதித்துள்ளார். மேலும்,  இதனைத் தீவிரமாகக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில்,  கோத்தகிரி அருகே தப்பக்கம்பையில் தனியார் சொகுசு விடுதிக்கு சாலை அமைக்கும் பணியில் அனுமதியில்லாமல் பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து குன்னூர் கோட்டாட்சியர் கீதாபிரியா அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அங்கு பொக்லைன் இயந்திரம் இயக்கப்பட்டு கொண்டிருந்தது தெரியவந்தது.  இதனையடுத்து,  அந்த  பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.   இதுகுறித்து விசாரணைக்குப் பின்  உரிமையாளர் மீது   மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர்  கீதாபிரியா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

SCROLL FOR NEXT