நீலகிரி

வால்பாறை அருகே யானைகள் தாக்கி குடியிருப்புகள் சேதம்

DIN

கோவை மாவட்டம், வால்பாறை அருகே யானைகள் தாக்கி தொழிலாளர்களின் குடியிருப்புகள் சேதமடைந்தன.
வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட்டின் பங்களா டிவிஷனுக்குள் குட்டியுடன் கூடிய 5 யானைகள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்தன. அவை அங்குள்ள தொழிலாளர்கள் குடியிருப்பின் ஜன்னல், கதவுகளை இடித்து தள்ளின. சப்தம் கேட்டு எழுந்த தொழிலாளர்கள் பின்பக்கம் வழியாகத் தப்பினர்.
இதையடுத்து, குடியிருப்புகளுக்குள் இருந்த பாத்திரங்களை வெளியே இழுத்துப் போட்டு சேதப்படுத்தின. தகவலறிந்து வந்த வனத் துறையினர், பொதுமக்களுடன் இணைந்து யானையை அப்பகுதியில் இருந்து விரட்டினர்.
ஆனால், அந்த யானைகள் வனத்துக்குள் செல்லாமல் சனிக்கிழமை காலை வரை அப்பகுதியிலேயே ஓய்வெடுத்தன. பின்னர், நீண்ட நேரம் கழித்து அவை வனத்துக்குள் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT