முகப்பு
நீலகிரி

இயற்கை உரங்களை மானியத்தில் வழங்க கோரிக்கை

கிராமங்கள் தோறும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு   அதிகரித்து வரும்  நிலையில் இயற்கை விவசாய விளைபொருள்களை

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:15 AM
பகிர்:

கிராமங்கள் தோறும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு   அதிகரித்து வரும்  நிலையில் இயற்கை விவசாய விளைபொருள்களை உழவர் சந்தைகளில் விற்கும்போது  இடுபொருள்களை மானியத்தில் வழங்க  மாவட்ட  நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள்  கூறியதாவது:
கூட்டு பண்ணையத் திட்டம் மூலம் தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடக்கும் பணிமனைக் கூட்டத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. 
கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குநரை கிராம மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில்,  போதுமான அளவு இயற்கை உரங்களை  மானியத்தில் வழங்க மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.