நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் 2 புலிக்குட்டிகள் சாவு

DIN

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இரண்டு புலிக்குட்டிகள் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட பில்சோனா சரகம் வனப் பகுதியிலுள்ள அவரல்லா பீட்டில் இரண்டு புலிக்குட்டிகள் இறந்து கிடப்பதாக, வனச்சரக அலுவலர் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது.  அந்த இடத்தை ஆய்வு செய்த வனத் துறையினர்,  கால்நடை மருத்துவர் கலைவாணியை வரவழைத்து பிரேதப் பரிசோதனை செய்தனர்.
பிறந்து சுமார் 15 நாள்களே ஆன குட்டிகளை ஆண் புலி தாக்கிக் கொன்றிருக்கலாம் என்று வனத் துறையினர் தெரிவித்தனர். புலிக்குட்டிகள் இறந்துகிடந்த இடத்தில் கள இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி, உதவி கள இயக்குநர்கள் புஷ்பாகரன், சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT