நீலகிரி

பசுந்தேயிலைக்கு கிலோ ரூ.30 வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

DIN

பசுந்தேயிலை விவசாயிகளுக்கு 1 கிலோவுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.30 வழங்கக் கோரி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 6-ஆம் கட்டமாக கண்டனப் போராட்டம் மஞ்சூர் அருகேயுள்ள கைகாட்டி பஜாரில் நடைபெற்றது. 
இப் போராட்டத்துக்கு சிறு குறு பசுந்தேயிலை விவசாய சங்கத் தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
 போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
விலை நிர்ணய கமிட்டி நிர்ணயித்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தொழிற்சாலைகள் மாதா மாதம் பணப் பட்டுவாடா செய்ய வேண்டும். தேயிலை வாரியம் நிர்ணயித்த நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கவேண்டும். 
கூட்டுறவுத் தேயிலைத் தெழிற்சாலைகள், பாட்லீப் தொழிற்சாலைகள் இதுவரை சுமார் ரூ.60 கோடியை விவசாயிகளுக்கு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளன. 
இதில், கூட்டுறவுத் தேயிலைத் தெழிற்சாலைகள் மட்டும் குறைந்தபட்சம் ரூ.35 கோடி வரை நிலுவை வைத்துள்ளது. இதை தேயிலைவாரியம் பிடித்தம் செய்து விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். 
இதுதொடர்பாக பசுந்தேயிலை விவசாயிகள் கடந்த 25 மாதங்களுக்கு மேலாக நிலுவைத் தொகையை வழங்குமாறு கேட்டும் வழங்கவில்லை. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி உற்பத்திச் செலவுடன் கூடிய ஆதார விலை வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை கடந்த 2013-ஆம் ஆண்டும் முதல் தற்போது வரை நடைமுறைப்படுத்தாமல் வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற பரிந்துரைப்படி உற்பத்திச் செலவுடன் கூடிய ஆதாரவிலை வழங்கப் பரிந்துரைத்தது. 
கடந்த 2012-ஆம் ஆண்டே பசுந்தேயிலை உற்பத்திச் செலவு ரூ.17.50-ஐத் தாண்டியது. தற்போதைய நிலையில் பசுந்தேயிலை உற்பத்தி செய்ய கிலோவுக்கு  ரூ.30க்கு அதிகமாகிறது. எனவே விவசாயிகளுக்கு தேயிலை தொழிற்சாலை நிர்வாகங்கள் குறைந்தபட்ச விலையாக ரூ.30 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
எனவே,  மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 6-ஆம் கட்டமாக கைகாட்டி பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கைகாட்டி, பெங்கால்மட்டம், கோத்திபென், அறையட்டி, ஆருக்குச்சி, மேலூர், மஞ்சக்கம்பை, தேனாடு, சக்கோட்டி, தேவர்சோலை, காத்தாடிமட்டம், ஒசட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT