உதகையில் பேருந்து மோதியதில் பெண் சாவு
உதகை மத்திய பேருந்து நிலையம் எதிரே பெண் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நீலகிரிஉதகையில் பேருந்து மோதியதில் பெண் சாவு
உதகை மத்திய பேருந்து நிலையம் எதிரே பெண் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உதகை மத்திய பேருந்து நிலையம் எதிரே பெண் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உதகையிலுள்ள தனியார் பள்ளியில் பணியாற்றுபவர் சின்னப்பா (53), அவரது மனைவி வள்ளி (47). இவர்கள் இருவரும் புதன்கிழமை மாலை மத்திய பேருந்து நிலையம் வழியாக ஆர்.கே.புரம் பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மத்திய பேருந்து நிலையம் எதிரே இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வழியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் கதவு திடீரென திறக்கப்பட்டுள்ளது. இதில் நிலைகுலைந்த சின்னப்பா வாகனத்தை நிறுத்துவதற்குள் பின்புறம் அமர்ந்திருந்த வள்ளி சாலையில் கீழே விழுந்துள்ளார்.
அப்போது, பின்னால் வந்த உதகை- கோவை அரசுப் பேருந்து வள்ளி மீது மோதியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே கதவை திடீரென திறந்த அந்த கார் அங்கிருந்து தப்பி விட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அந்த பேருந்தைக் கைப்பற்றியதோடு பேருந்தின் ஓட்டுநர் பிரதீப்பை அழைத்துச் சென்றனர். இவ்விபத்து தொடர்பாக உதகை நகர காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.