நீலகிரி

கைகாட்டி பஜாரில் எரியாத தெரு விளக்குகள்: சீரமைக்க கோரிக்கை

DIN

மஞ்சூர் அருகே கைகாட்டி பஜார் பகுதியில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.
 மஞ்சூர் அருகே கைகாட்டி பஜார் பகுதியில் இருந்து ஆருக்குச்சி, அறையட்டி, மேலூர், மஞ்சக்கம்பை, நெடுகல் கம்பை, ஆலட்டனை உள்ளிட்ட கிராமங்கள் மட்டுமல்லாமல் குந்தா, மஞ்சூர், கிண்ணக்கொரை, தேவர்சோலா, பெங்கால் மட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மையப் பகுதியாக உள்ளது.  ஊட்டி, குன்னூர் பகுதியில் இருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் இங்கு தான் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன. 
மேலும், இப் பகுதி அடர்ந்த தேயிலைத் தோட்டம், அடர்ந்த வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் கரடி, காட்டு எருமை, காட்டுப் பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் இங்கு நடமாடி வருகின்றன.
இந்நிலையில் பஜார் பகுதியில் கடந்த 2 மாதங்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்குமாறு இப் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து முன்னாள் கவுன்சிலர் ராஜபிரதாப் கூறுகையில், இரவு நேரத்தில் தெருவிளக்கு எரியாததால் பொதுமக்கள் வனவிலங்குகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT