நீலகிரி

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: கணிதம், விலங்கியல் தேர்வுகளை நீலகிரியில் 74 பேர் எழுதவில்லை

DIN

நடைபெற்றுவரும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கணிதம், விலங்கியல் பாடத் தேர்வுகளை  நீலகிரி மாவட்டத்தில் 74 பேர் எழுதவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் தேர்வெழுதத் தகுதியான 3,586 பேரில் 3,512 பேர் மட்டுமே பங்கேற்றனர்; 74 பேர் தேர்வெழுதவில்லை.  இவர்களில் கணிதத் தேர்வெழுத வேண்டிய 2,278 பேரில் 2,248 பேர் மட்டுமே தேர்வெழுதியுள்ளனர்;  30 பேர் தேர்வெழுதவில்லை.  
அதேபோல விலங்கியல் பாடத்தில் தேர்வெழுத வேண்டிய 1,308 பேரில்  1,264 பேர் மட்டுமே தேர்வெழுதியுள்ளனர்;  44 பேர் தேர்வெழுதவில்லை.  தனித்தேர்வர்கள் எவரும் இத்தேர்வுகளுக்காக பதிவு செய்யவில்லை.  மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புச் சலுகைகளைப் பெற்று 22 பேர் தேர்வெழுதினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT