உதகையில் மக்கள் குறை தீர் கூட்டம்
உதகையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் 143 கோரிக்கை மனுக்கள் பெறப்
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
உதகையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் 143 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட கலால்துறை உதவி ஆணையர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டு மனைப் பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித் தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட அவர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தார்.