பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தல்
ஆறாமைல் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்துப் பிடிக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மஞ்சூர் அருகே ஆறாமைல், காத்தாடிமட்டம், பாலகொலா, நுந்தளாமட்டம்,
ஆறாமைல் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்துப் பிடிக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மஞ்சூர் அருகே ஆறாமைல், காத்தாடிமட்டம், பாலகொலா, நுந்தளாமட்டம், அதிகரட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.
வனப்பகுதியொட்டு அமைந்துள்ள இக்கிராமங்களில் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் உள்ளன. உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன விலங்கள் கிராமப் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்து வருகின்றன.
ஆறாமைல் பகுதியில் சுற்றித்திரியும் 100க்கு மேற்பட்ட குரங்குகள் குடியிருப்புகளில் நுழைந்து வீட்டிலுள்ள பொருள்களை சேதப்படுத்துவதுடன் குழந்தைகளையும், பெரியவர்களையும் தாக்கி அச்சுறுத்தும் நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியாத நிலை உள்ளது.
எனவே, இப்பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திவரும் குரங்குகளை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.