நீலகிரி

நோய்களைக் கட்டுப்படுத்த பேருந்துகளில் கொசு மருந்து தெளிப்பு

DIN

கோத்தகிரி பேரூராட்சி சார்பில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை செயல் அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோத்தகிரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
பேரூராட்சியில் பணிபுரியும் 67 துப்புரவுப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் இதனால் பயனடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, டெங்கு , பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க சமவெளிப் பகுதிகளில் இருந்து கோத்தகிரி வரும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும், கைப்பிடிகள், இருக்கைள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டு, பேருந்துகளில் கொசு மருத்து தெளிக்கப்பட்டது.
பேருந்துகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கும் பணியைத் தொடர உள்ளதாக கோத்தகிரி பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT