நீலகிரி

இந்து முன்னணி பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக பிரமுகர் கைது

DIN


வால்பாறையில் முன்விரோதத்தால் இந்து முன்னணி பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக பிரமுகரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
வால்பாறையை அடுத்த அய்யர்பாடி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (43). இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு, இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த வால்பாறை கக்கன் காலனி பகுதியைச் சேர்ந்த ரமேஷ், சுப்பிரமணியம் ஆகிய இருவரையும் நீக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அன்பழகனுக்கும், நீக்கப்பட்ட இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு, அன்பழகனை அவர்கள் அடிக்கடி தரக்குறைவாகப் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பாஜகவைச் சேர்ந்த செல்வகுமாரிடம், அன்பழகன் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாகச் சென்ற பாஜக மண்டலப் பொதுச் செயலாளர் கார்த்திக், ரமேஷ், சுப்பிரமணியம் ஆகிய மூவரும் அன்பழகனைத் தாக்கி, தரைகுறைவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம். இது தொடர்பாக வால்பாறை காவல்நிலையத்தில் அன்பழகன் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாஜக மண்டல பொதுச்செயலாளர் கார்த்திக்கை (27) கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT