நீலகிரி

கூடலூரில் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம்

DIN


கூடலூரில் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூடலூரிலுள்ள காசிகா இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம், கூடலூர் பசுமை மீட்புக் குழு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கில் டான் டீ பொது மேலாளர் ஜெயராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். டி.எஸ்.பி. ஜெய்சிங், கூடலூர் பாரதியார் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வர் சுரேஷ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். காசிகா இலவச ஐ.ஏ.எஸ்.அகாடமி நிறுவனர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் காளிமுத்து, செயலாளர் சிவசுப்பிரமணியம், அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் சங்கர், அரசுப் பள்ளி
ஆசிரியர்கள் சந்திரகுமார், பசுமை மீட்புக் குழு நிர்வாகிகள்அன்பரசன், சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, ஆசிரியர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சத்தியநேசன் நன்றி கூறினார். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT