நீலகிரி

சந்தன மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது

DIN

சந்தன மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கூடலூரில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
கூடலூர் பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியவர்களைப் பிடிக்க மாவட்ட வன அலுவலர் ராகுல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.  
இந்நிலையில்,  தனிப்படையினர் வெள்ளிக்கிழமை இரவு கூடலூர் சின்னப் பள்ளிவாசல் சாலையில் ரோந்து சென்றபோது, அவ்வழியாகச் சென்றுக்கொண்டிருந்த 4 பேர் வனத் துறையினரைப் பார்த்ததும் தங்கள் கையில் இருந்த பொருள்களை கீழே போட்டுவிட்டுத் தப்பிவிட்டனர். அவர்கள் கீழே போட்டுவிட்டுச் சென்றது சந்தன மரக் கட்டைகள் எனத் தெரியவந்தது. 
இது தொடர்பாக தனிப்படையினர் கர்நாடக மாநிலம்,  குடகுப் பகுதியைச் சேர்ந்த லிங்ராஜர் (37), அதே பகுதியைச் சேர்ந்த அஜூஸ் (43), கூடலூர் முதல் மைல் பகுதியைச் சேர்ந்த ஏஜூர் (37), ஜெயினுல் ஆபிது (35) ஆகியோரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT