ஆபத்து, விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உதவ "காவலன் செயலி' அறிமுகம்
நீலகிரி மாவட்டம், குன்னூரில் காவல் துறை சார்பில் ஆபத்துகள், விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உதவ காவலன் செயலி (காவலன் மொபைல் ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் காவல் துறை சார்பில் ஆபத்துகள், விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உதவ காவலன் செயலி (காவலன் மொபைல் ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காவலன் செயலிலையப் பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "ஆண்ட்ராய்டு' செல்லிடப்பேசிகளில் இந்த "மொபைல் ஆப்'யை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். பின்னர், செல்லிடப்பேசியில் ஒரு பட்டனை தொட்டாலே உடனடியாக ஜிபிஎஸ் மூலம் ஒலி, ஒளியுடன் கூடிய விடியோ அழைப்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துவிடும். ஆபத்து மற்றும் விபத்துகளில் சிக்கியவர்களின் இடம் மற்றும் நேரத்தை காட்டுவதால் உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உதவி புரிய ஏதுவாக இருக்கும். ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி வைத்துள்ளவர்கள் அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு, தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்திப் பயன்பெறலாம் என்றனர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் முரளி, காவல் ஆய்வாளர் சுப்ரமணி, துணை ஆய்வாளர்கள் ரகுவரன், சம்பத், பெள்ளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.