முகப்பு
நீலகிரி

பசுந்தேயிலைக்கு ரூ.12.50 விலை நிர்ணயம்

பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோவுக்கு ரூ. 12.50 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:16 AM
பகிர்:

பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோவுக்கு ரூ. 12.50 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து குந்தா தேயிலை வாரிய துணை இயக்குநர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு ஆகஸ்ட் மாதத்துக்கு குறைந்தபட்சக் கொள்முதல் விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 12.50 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையை அனைத்துத் தொழிற்சாலைகளும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். 
மேற்படி விலை வழங்காத தொழிற்சாலைகள் குறித்து விவசாயிகள் தேயிலை வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கலாம்.  தேயிலை வாரியத்தின் வளர்ச்சி அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குநர்கள்,  பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.