நீலகிரி

ஆசிய-பசிபிக் மாஸ்டர்ஸ் கூடைப்பந்து போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம்

DIN

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் முதலாவது மாஸ்டர்ஸ் போட்டியில் இந்திய கூடைப்பந்து அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.
 மலேசியாவின் பினாங்கு நகரில் முதன்முறையாக ஆசிய-பசிபிக் மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்தியாவின் சார்பில் பல்வேறு விளையாட்டு  அணிகளுக்காக 375 பேர் பங்கேற்றிருந்தனர். 
இதில், இந்தியக் கூடைப்பந்து அணியில் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் ஜே.ரவிகுமார் உள்ளிட்ட நான்கு பேரும் இடம் பெற்றிருந்தனர். இறுதி ஆட்டத்தில் இந்த அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. 
பதக்கத்துடன் உதகை திரும்பிய வீரர்களுக்கு திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT