நீலகிரி

சத்தியமங்கலத்தில் மழை வேண்டி வருண யாகம்

DIN

சத்தியமங்கலத்தில் மழை வேண்டி  வருண யாகம் சனிக்கிழமை நடத்தப்பட்டது
தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்துவிட்டது. குளம், குட்டைகள், ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயப் பகுதியான சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் கேள்விக் குறியானது. கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சத்தியமங்கலம் சுற்றுவட்டார மக்கள் இணைந்து மழை வேண்டி இசையால், வேதத்தால், திருமுறைகளால் வருண யாகம் நடத்தப்பட்டது. நீர் நீரப்பப்பட்ட வெண்கலப் பாத்திரத்தில் வேத விற்பன்னர்கள் அமர்ந்து மழை வேண்டி இறைவனிடம் வேண்டினர். வேத மந்திரங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் மலர்கள் தூவி பிரார்த்தனை நடத்தினர்.  நித்ய மகாதேவன் குழுவினர் தெய்வீக பாடல்கள் பாடி இறைவனிடம் பிரார்த்தித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT