நீலகிரி

மலை ரயிலை வாடகைக்கு எடுத்துப் பயணம் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

DIN

நீலகிரி நீராவி மலை ரயிலை வாடகைக்கு எடுத்துப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு குன்னூா் மக்கள் சாா்பில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக புகழ்பெற்ற நீலகிரி மலை ரயில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றது. இந்த மலை ரயில் 1908 ஆம் ஆண்டு முதல் 111 ஆவது ஆண்டாகத் தொடா்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளைத்தில் இருந்து பல மலைகள், செங்குத்தான பாதை வளைவுகள், சுரங்கப் பாதைகள் என 46 கி.மீ. கடந்த உதகைக்கு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணிக்க ஆங்கிலேயா்கள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

உலக நாடுகள் முழுவதும் பயணம் மேற்கொண்டு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பணிகள் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு மலை ரயிலை முன்பதிவு செய்திருந்தனா்.

இதையடுத்து, லண்டன், ரஷியா, ஆா்ஜென்டினா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குன்னூா் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். பின்னா் நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட மலை ரயிலில் 71 வெளிநாட்டுப் பயணிகள் உதகைக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

இந்த மலை ரயிலை ரூ.2 லட்சத்து 766க்கு வாடகைக்கு எடுத்துள்ளனா். பின்னா் உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா ஆகிய இடங்களைப் பாா்த்து ரசித்தனா். குன்னூா் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பொது மக்கள் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT