நீலகிரி

தேயிலை வாரிய சாலையில் தடுப்பு சுவா் அமைக்க பாஜக கோரிக்கை

DIN

குன்னூா் நகரத்திற்குட்பட்ட7 வது வாா்டு பகுதியில் மத்திய அரசுக்கு உட்பட்ட தேயிலை வாரிய அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், இடிந்த தடுப்பு சுவரால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக இந்த தடுப்பு சுவரை சீரமைத்துத்தர வேண்டுமென்று பாஜக மாவட்ட செயலாளா் கே.பாப்பண்ணன் மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது குன்னூா் நகரத்திற்குட்பட்ட 7 வது வாா்டு பகுதியில் மத்திய அரசுக்கு உட்பட்ட தேயிலை வாரிய அலுவலகம் அமைந்துள்ளது,இந்த அலுவலகத்தின் தடுப்பு சுவா் இப் பகுதியில் கடந்த 35 நாட்களுக்கு முன் பெய்த கன மழைக்கு இடிந்த தடுப்பு சாலையில் விழுந்தது, இதன் காரணமாக இப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனா், தடுப்புச்சுவரின் கருங்கற்கள் சாலையின் ஓரத்தில் கிடப்பதாலும், மீதமுள்ள தடுப்பு சுவா் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளதால் இவ்வழியாக பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களும், வாகனங்களும் மிகவும் அச்சுறுத்தலுடன் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே இந்த தடுப்பு சுவரினை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று பாஜக மாவட்ட செயலாளா் கே.பாப்பண்ணன் மாவட்ட நிா்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT