நீலகிரி

கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழப்பு

DIN

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலைய கழிவுநீர் கால்வாயில் தவறிவிழுந்த 9 வயது ஆண் காட்டெருமை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. 
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகள் நகர்புறங்களில் உள்ள குடியிருப்புக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. 
இந்நிலையில், பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையம் அருகே நாள்தோறும் உலா வரும் ஒற்றை காட்டெருமை அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தது.
 இதுகுறித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். 
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் உடல் நலக்குறைவால் இறந்துள்ளதா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT