நீலகிரி

வெலிங்டன் கன்டோன்மென்ட் பள்ளி முற்றுகைஜென்ம நில சட்ட திருத்த மசோதாவை கண்டித்து திமுக சார்பில் ஜனவரி 24 ஆம் தேதி போராட்டம்

DIN

ஜென்ம நில சட்டதிருத்த மசோதாவைக் கண்டித்து, திமுக சார்பில்  கூடலூர் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பு வரும் ஜனவரி 24 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினர் திராவிடமணி தலைமை வகித்தார்.  
கூட்டத்தில்,  கூடலூர் பிரிவு-17 நிலங்களை பிரிவு-53 இன் கீழ் வன நிலமாக மாற்றும் சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில்  குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.  இந்நிலையில் அப்பகுதி மக்களை பாதிக்கும் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து வரும் ஜனவரி 24 ஆம் தேதி கூடலூரிலுள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பு  திமுக சார்பில் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கபப்ட்டது. 
கூட்டத்தில், கூடலூர் நகரச் செயலாளர் ராஜேந்திரன், நெல்லியாளம் நகரச் செயலாளர் காசிலிங்கம், ஒன்றியச் செயலாளர்கள் லியாகத் அலி, சிவானந்தராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராஜா உள்ளிட்ட  நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT