நீலகிரி

குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ரூ. 31 கோடி வருவாய் அதிகரிப்பு

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை ஏல மையத்தில் கடந்த 4 மாதங்களில் நடைபெற்ற ஏலத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் ரூ. 31 கோடி வருவாய் அதிகரித்துள்ளதாக சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: குன்னூர் தேயிலை ஏல மையத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 17 ஏலங்கள் நடைபெற்றன. இதில் 1 கோடியே 75 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனை செய்யப்பட்டது. மொத்த வருமானம் ரூ. 175 கோடி. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் 1 கோடியே 55 கிலோ தேயிலை தூள் விற்பனை செய்யப்பட்டது. இதன் மொத்த வருமானம் ரூ. 144 கோடி. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ரூ. 31 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. இதில், சராசரி விலையாக கிலோவுக்கு ரூ. 100. 27 ஆக  இருந்தது. இது கடந்த ஆண்டில் ரூ. 93.16 ஆக இருந்தது. இது 21.52 சதவீத வளர்ச்சியாகும். 
வர்த்தகர்களிடையே தேவை அதிகரித்ததால் விற்பனையின் அளவு அதிகரித்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மொத்த வருவாய் ரூ. 31 கோடி அதிகரித்துள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் நடப்பாண்டின் இறுதியில் கடந்த ஆண்டை விட ரூ. 90 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT