நீலகிரி

கொடநாடு எஸ்டேட்  கொலை, கொள்ளை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவர்கள் 26இல் ஆஜராக உத்தரவு

DIN

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் 8 பேர் ஆஜரான நிலையில் ஜம்ஷேர் அலி, சதீசன் ஆகியோர் ஆஜராகாததால், அவர்கள் அனைவரையும் வரும் 26ஆம் தேதி நேரில் ஆஜராக மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை  புதன்கிழமை உத்தரவிட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான  கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ்சாமி,  திபு,  ஜிதின்ஜாய், ஜம்ஷேர் அலி, சந்தோஷ்சாமி, உதயகுமார்,  வாளையாறு மனோஜ், பிஜின்குட்டி, சதீசன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 8 பேர் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்கள். ஆனால், சதீசன், ஜம்ஷேர் அலி ஆகியோர் ஆஜராகவில்லை.
இந்த வழக்கை விசாரித்த  மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி,  வடமலை,  குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் வரும் 26ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT