நீலகிரி

குன்னூரில் 61ஆவது பழக் கண்காட்சி: சிறந்த பழத் தோட்டம் தேர்வு துவக்கம்

DIN

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 25, 26 ஆகிய தேதிகளில் 61ஆவது பழக் கண்காட்சி நடக்கிறது.  இதில் சிறந்த பழத் தோட்டத்துக்கான தேர்வு மே 13ஆம் தேதி வரை நடக்க உள்ளது என தோட்டக் கலைத் துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 25  26 ஆகிய தேதிகளில் 61ஆவது பழக் கண்காட்சி நடக்கிறது. இதற்காக சிறந்த பழத் தோட்டத்துக்கான தேர்வு வியாழக்கிழமை முதல் வரும் 13ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.  
இப்போட்டிக்கான விண்ணப்ப படிவம், குன்னூர், உதகை , கூடலூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் உள்ள தோட்டக்கலை 
உதவி இயக்குநர் அலுவலகங்கள், உதகை அரசு தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் மே 7ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.  
இதில் சிறந்த பழத்தோட்டம் அமைக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் பதிவுக் கட்டணமாக ரூ. 75 செலுத்தி விண்ணப்ப படிவத்தை மே 8ஆம் தேதி மாலை 5 மணிக்குள் குன்னூரில்  உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT