நீலகிரி

தரமான விதைகளை பரிசோதித்து வழங்க வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு தரமான விதைகளைப் பரிசோதித்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.    

DIN


விவசாயிகளுக்கு தரமான விதைகளைப் பரிசோதித்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.    
இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகி நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு  மலை காய்கறிகளும்,  கொய்மலர் உற்பத்தியும்  செய்யப்படுகிறது. 
இந்த விவசாயத்திற்காக  தனியார் நிறுவனங்களிடம்  இருந்து விதைகள் வாங்கும்போது சில நேரங்களில் தரமில்லாமல் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.
தரமான விதை அதிக வீரியத்துடனும், அதிக முளைப்புத்திறனுடன் காணப்படும். அதிக வீரியத்துடன் வளர்வதால் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கும். விவசாயிகள் தரமான விதைகளைப் பயன்படுத்தும் போது சாகுபடி செலவுகளைக் குறைக்க முடியும். 
எனவே, வேளாண் அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து தரமான விதைகள் கடைகளில் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளை  இழப்பில் இருந்து காப்பாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரி கைது

SCROLL FOR NEXT