நீலகிரி

வனத் துறை, வருவாய்த் துறையை கண்டித்து மே 20 இல் ஆர்ப்பாட்டம்

DIN

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சோதனைச் சாவடி மூலம் கட்டுமானப் பொருள்கள், விவசாய பொருள்களை கொண்டு செல்வதை தடுக்கும் வனத் துறை, வருவாய்த் துறையை கண்டித்து கூடலூரில் வரும் திங்கள்கிழமை (மே 20) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 ஓவேலி பகுதியில் வாழும் அனைத்து மக்களின் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், மின் இணைப்புகள் வழங்க வேண்டும், வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும், கதவு எண் இல்லாத வீடுகளுக்கு கதவு எண் வழங்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.  வரும் திங்கள்கிழமை (மே 20) காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஓவேலி கிராம அனைத்துக் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT