நீலகிரி

உதகையில் 5 நாள் கோடை விழா தொடக்கம்

DIN

மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து உதகையில் கோடை  சீசனையொட்டி 5 நாள் கோடை விழா திங்கள்கிழமை தொடங்கியது.
சுற்றுலாத் துறையின் சார்பில் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் கோடை விழா - 2019 கலை நிகழ்ச்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்துப் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்தக் கோடை விழா நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவார்கள். 
இதேபோல, இந்த ஆண்டின் கோடை விழா கலை நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளன. 
இதில் கிளாரிநெட் இசை, பரத நாட்டியம், தப்பாட்டம் ஆகியவற்றுடன் தெலங்கானா, கேரளம், கர்நாடக மாநிலங்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகளும், பல்சுவை நடன நிகழ்ச்சிகளும், கரகாட்டம், இன்னிசை நிகழ்ச்சி, வாய்ப் பாட்டு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மே 31 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெறும். இந்தக் கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை  திட்ட இயக்குநர் பாபு, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனம் ஆகியோருடன் அரசுத் துறை அலுவலர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT