நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில்  பரவலாக மழை

DIN

நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிக அளவாக கூடலூரில் 54 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடைப் பருவம் விரைவில் முடிவடையவுள்ள சூழலில் தென்மேற்குப் பருவ மழைக்கான சூழலும் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் குறைந்து பலத்த காற்று வீசி வருவதுடன் இரவு நேரங்களில் பரவலாக மழைப் பொழிவும் உள்ளது. தென்மேற்குப் பருவ மழை கேரள மாநிலத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் கேரள மாநிலத்தையொட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் தற்போதே குளிர்ச்சியான கால நிலை நிலவுகிறது.
இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இரவில் பரவலாக  நல்ல மழை பெய்துள்ளது.  இதில் அதிக அளவாக கூடலூரில் 54 மி.மீ., கிளன்மார்கனில் 34 மி.மீ., நடுவட்டத்தில் 30 மி.மீ., கொடநாட்டில் 12 மி.மீ., கோத்தகிரியில் 6 மி.மீ., தேவாலாவில் 4 மி.மீ., கல்லட்டியில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

SCROLL FOR NEXT