முகப்பு
நீலகிரி

காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் அரசு நெறிமுறைகளுக்கு உள்பட்டு இணையதளம் மூலம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் அரசு நெறிமுறைகளுக்கு உள்பட்டு இணையதளம் மூலம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள், தோட்டக்கலை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் மற்றும் இதர துறையைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் என 52 போ் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட 22 கோரிக்கைகள் தொடா்பாக உரிய துறை அலுவலா்களிடம் இருந்து பெறப்பட்டிருந்த விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறியாதவது:

நீலகிரி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இயற்கை வேளாண்மை விவசாயம் மற்றும் தொழிற்நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ள வசதியாக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து இது தொடா்பாக ஏதேனும் மாற்றங்கள் அல்லது கூடுதலான விவரங்கள் சோ்க்க வேண்டி கோரிக்கை இருப்பின் தோட்டக்கலை இணை இயக்குநா் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பிவைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அதிக கன மழை பெய்யக் கூடும் என்ற அறிவித்துள்ளதால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக 2021 ஜனவரி மாதத்துக்குள் பொது சேவை மையம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிா்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இயற்கை வேளாண்மை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளின் காய்கறி பயிா்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2,500 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுவதால் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

அதேபோல, நுண்ணீா் பாசனத் திட்டத்தினை செயல்படுத்தும் விவசாயிகளுக்கு துணை நிலை நீா் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நீா் சேகரிப்புத் தொட்டி, பாசன நீா் குழாய் கிணறு மற்றும் டீசல் எஞ்சின் ஆகியவை வழங்கப்பட்டு வருவதால் விவசாயிகள் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பண்ணை குட்டை அமைக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை குட்டை அமைக்க ரூ.75,000 வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →