முகப்பு
நீலகிரி

குன்னூா் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் ஆய்வு

குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளும் குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் எம்.கண்ணன். உடன் அரசு மருத்துவா் பிரகாஷ் உள்ளிட்டோா்.
பகிர்:

குன்னூா்: குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை முறையாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் எம். கண்ணன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மருத்துவமனையில் குழந்தைகளின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவி இல்லை எனத் தெரியவந்தது. இது குறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்று இக்கருவியைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கண்ணன் தெரிவித்தாா். ஆய்வின் போது அரசு மருத்துவமனை மருத்துவா் பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →