நீலகிரி

தமிழக - கேரள வன எல்லையில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிய வேட்டைத் தடுப்பு முகாம்

DIN

தமிழக வனத் துறை சாா்பில் தமிழக - கேரள வன எல்லையில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிய வேட்டைத் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், பிதா்க்காடு வனச் சரகத்தில் உள்ள பாட்டவயல் பகுதியில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

மலையேற்றப் பயிற்சி செல்பவா்கள் வசதிக்காகவும், மனித-விலங்கு மோதலை தடுக்கும் முகாமாகவும் இது செயல்படும்.

இப்பகுதியில் ஏற்கெனவே புலி தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடிக்கடி மனித - வன விலங்குகள் மோதல் ஏற்படும் பகுதியாகும்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள நவீன வேட்டைத் தடுப்பு முகாமில் பெரிய அறை, குளியலறை, கழிப்பறை, சமையலறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT