முகப்பு
நீலகிரி

நீலகிரியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரியில் 8 மாதங்களுக்குப் பிறகு அனைத்து சுற்றுலா மையங்களும் இம்மாதம் 7 ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சனிக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
பகிர்:

குன்னூா்: நீலகிரியில் 8 மாதங்களுக்குப் பிறகு அனைத்து சுற்றுலா மையங்களும் இம்மாதம் 7 ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சனிக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.

ஆண்டுக்கு 33 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து சென்ற நிலையில், கரோனா தொற்றுக் காரணமாக கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்ட சுற்றுலா மையங்கள் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டன. இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறை, சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடா் விடுமுறை காரணமாக நீலகிரியில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துள்ளனா்.

இங்குள்ள தாவரவியல் பூங்கா, ஆறாவதுமைல், படகு இல்லம் , தொட்டபெட்டா மலைச் சிகரம், கொடநாடு காட்சி முனை, பைக்காரா படகு இல்லம், சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்பட மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் அனைத்திலும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

தற்போது நீலகிரியில் நிலவும் இதமான தட்பவெப்பநிலை காரணமாகவும், பசுமை நிறைந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிப்பதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளம், கா்நாடகம் மற்றும் வட மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனா். இனிவரும் நாள்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →