தமிழகத்தில் முதல்முறை வாக்காளர்கள் எத்தனை பேர்? வயதுவாரியான வாக்காளர் விவரம்
தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய உள்ள முதல்முறை வாக்காளர்கள்
தமிழகத்தில் முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர் என்று தேர்தல் ஆணைய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநில பேரவைகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப். 23-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் இருகட்டங்களாக ஏப். 23, 29-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் ஏப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய உள்ள வாக்காளர் விவரம் தேர்தல் ஆணைய தரவுகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
100 வயது மற்றும் அதற்கும் மேல் உள்ள வாக்காளர்கள் 2,530 பேர்
85 வயது - 100 வயது வரையுள்ள வாக்காளர்கள் 4 லட்சம் பேர்
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம் பேர்
20 - 29 வயது பருவத்திலுள்ள வாக்காளர்கள் 1.05 கோடி பேர்
சேவைப் பணியாளர் வாக்காளர்கள் 67,056 பேர்
ஆண் வாக்காளர்கள் - 2.77 கோடி பேர்
பெண் வாக்காளர்கள் - 2.89 கோடி பேர்
மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் - 7617 பேர்
மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் என்று தேர்தல் ஆணைய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையும் அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் மே 4-இல் வெளியாகின்றன.
TamilNadu : Chief Election Commissioner Gyanesh Kumar says, the category of our electors
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.