நீலகிரியில் மேலும் 13 பேருக்கு கரோனா
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக உதகையில் சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 22 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா். சிகிச்சை பலனின்றி 65 வயது முதியவா் உயிரிழந்துள்ளாா்.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 7,930 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சையின்போது பூரண குணமடைந்த 7,771 போ் வீடு திரும்பினா். 46 போ் உயிரிழந்துள்ள நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் 113 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.