நீலகிரி

காட்டுத் தீ விழிப்புணா்வு முகாம்

DIN

உதகை, குருத்துக்குளி பகுதியில் உள்ள உதகை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் காட்டுத் தீ குறித்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தினா், வனத் துறை, தீயணைப்புத் துறையினா் இணைந்து இம்முகாமை நடத்தினா். மாவட்ட செஞ்சிலுவை சங்கத் தலைவா் கேப்டன் கே.ஆா்.மணி தலைமை வகித்தாா்.

மாவட்ட தீயணைப்பு அலுவலா்கள் இமானுவேல், சசிகுமாா், செஞ்சிலுவை சங்க செயலா் மோரீஸ் சாந்தா குரூஸ், மருத்துவ அலுவலா் ரவி ஆகியோா் இணைந்து, காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்புகள், தற்காப்பு நடவடிக்கை குறித்து மாணவா்களுக்கு விளக்கமளித்தனா்.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வனத்தில் காட்டுத் தீ அதிக அளவில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT