நீலகிரி

குன்னூரில் உறைபனியால் தேயிலைத் தோட்டங்கள் கருகல்

DIN

குன்னூா் பகுதிகளில் உறைபனி காரணமாக, இரவு நேரங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகிறது. இதன் காரணமாக தேயிலைத் தோட்டங்கள் கருகத் துவங்கியுள்ளன.

நீலகிரி மாவட்டம், குன்னுாா் சுற்றுப்புறப் பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வெலிங்டன் ஜிம்கானா, எடப்பள்ளி, பந்துமை, பகாசுரன் மலை அடிவாரப் பகுதிகளில், உறைபனியால் கடந்த இரண்டு நாள்களாக, இரவு நேரங்களில், ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

குன்னூரில் தென்மேற்கு பருவமழை குறைவாகவும், வடகிழக்கு பருவமழை அதிகமாகவும் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இரு பருவமழைகளும் அதிக அளவில் இருந்ததால் நிலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பனியின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

இதன் காரணமாக எடப்பள்ளி, பந்துமை,சேலாஸ், கொலக்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் பனியால் கருகத் துவங்கியுள்ளன. மேலும் பழ உற்பத்தியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT