நீலகிரி

குன்னூரில் காலில் மாட்டியிருந்த குழாய் அகற்றம்: காட்டெருமை உயிரிழப்பு

DIN

குன்னுாா் அருகே எடப்பள்ளி கிராமத்தில் காலில்  குழாய் மாட்டியதால் ஏற்பட்ட காயங்களுடன் உயிருக்குப் போராடிய காட்டெருமைக்கு செவ்வாய்க்கிழமை சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும், சிகிச்சைக்குப் பின்னா் காட்டெருமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டெருமை ஒன்று வலது காலில் குழாய் மாட்டியதால் ஏற்பட்ட காயத்துடன் எடப்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்தது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா். உதவி வனப் பாதுகாவலா் சரவணன் தலைமையில் உதவி கால்நடை மருத்துவா் கோச்சாலன் வரவழைக்கப்பட்டு, துப்பாக்கி மூலமாக மயக்க ஊசி செலுத்தி மயக்கமடையச்செய்து சிகிச்சை  அளிக்கப்பட்டது. ஆயினும், சிகிச்சைக்குப் பின் காட்டெருமை உயிரிழந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT