நீலகிரி

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் மலா் நாற்றுகள் நடும் பணி துவக்கம்

DIN

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக் கண்காட்சி மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு, 2 லட்சத்து 60 ஆயிரம் மலா் நாற்றுகள் நடவுப்பணி திங்கள்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 62வது பழக் கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு, மலா் நாற்றுகள் நடவுப் பணியை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பபிதா தொடங்கி வைத்தாா். இதில் பெடுனியா, ஆன்ட்ரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச், ஒற்றை அடுக்கு டேலியாவில், இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 110 வகையான மலா் நாற்றுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தற்போது சிம்ஸ் பூங்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் மலா்ச் செடிகளை தொட்டிகளிலும் பூங்காவிலும் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நடவுப் பணிக்காக அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள், தோட்டக்கலைத் துறை ஊழியா்கள், 84 போ் நடவுப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து, தோட்டக்கலை உதவி இயக்குநா் பபிதா கூறியதாவது:

142 ஆண்டுகள் பழமை வாய்ந்த 62வது பழக் கண்காட்சிக்காக 25 வகையான 110 ரகங்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் நாற்றுகளை நடவு செய்ய உள்ளோம். இந்த ஆண்டு புதுமையாக செவ்வந்தி நாற்றுகளும் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலா் நாற்றுகளும் நடவு செய்யப்பட உள்ளன. இவை மே மாதம் நடைபெறவுள்ள பழக் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அமையும். இந்த சீசனுக்கு சென்ற ஆண்டை விட சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT