நீலகிரி

கரோனா: வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடல்

DIN

கரோனா வைரஸ் எதிரொலியாக நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மாா்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நீலகிரி எல்லையில் உள்ள கேரள மாநிலம், வயநாடு பகுதியில் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிா்க்குமாறு மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இந் நிலையில் குன்னூா், கோத்தகிரியில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படுவதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT