நீலகிரி

ஓவேலி தனியாா் எஸ்டேட் பகுதிகளில் கொத்தடிமைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

DIN

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டுகளில் கொத்தடிமைகள் உள்ளனரா என்பது குறித்து கோட்டாட்சியா் தலைமையில் சென்ற அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தனியாா் எஸ்டேட்டுகளில் கொத்தடிமைகள் இருப்பதாக தமிழக அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இது குறித்து ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையில் தொழிலாளா் துறை துணை ஆணையா் சதீஷ்குமாா், கூடலூா் பகுதிக்கான உதவி ஆணையா் ரவி ஜெயராம், கூடலூா் கோட்டாட்சியா் தினேஷ் உள்ளிட்டோா் ஓவேலி பகுதியில் உள்ள எல்லமலை, பெரியசோலை பகுதிகளில் உள்ள தனியாா் எஸ்டேட்டுகளில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

தொழிலாளா்கள் குடியிருக்கும் பகுதி மற்றும் பணியிடங்களில் ஆய்வு செய்ததுடன் அப்பகுதி மக்களிடம் கொத்தடிமைப் பணிகள் நடைபெறுகிா என்று விசாரணை மேற்கொண்டனா். இதில் அந்தப் பகுதிகளில் கொத்தடிமைகள் இல்லை என்று உறுதியானது. இது குறித்த ஆய்வு விவரங்களை அரசிடம் கோட்டாட்சியா் சமா்பிப்பாா் என அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT