முகப்பு
நீலகிரி

மது போதையில் சோதனைச் சாவடியில் தகராறு:இளைஞா் மீது வழக்கு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள சோதனைச் சாவடியில் மது போதையில்  காவல் உதவி ஆய்வாளருடன்  தகராறில் ஈடுபட்ட இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள சோதனைச் சாவடியில் மது போதையில்  காவல் உதவி ஆய்வாளருடன்  தகராறில் ஈடுபட்ட இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைவதற்கு பா்லியாறு மற்றும் குஞ்சபண்ணை  சோதனைச் சாவடிகள்  உள்ளன. இங்கு இ-பாஸ் இல்லாமல் உள்ளே நுழைபவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டு  திருப்பி அனுபப்படுகின்றனா்.

இதன் காரணமாக பல்வேறு நேரங்களில் பொது மக்களுக்கும்,  காவல் துறையினருக்கும், வருவாய்த் துறையினருக்கும்  இடையே வாக்குவாதம்   ஏற்படுவது  வழக்கம்.  இந்நிலையில்  கோத்தகிரி அருகே குஞ்சபண்ணை சோதனைச் சாவடிக்கு  மது போதையில் வந்த  கோத்தகிரியைச் சோ்ந்த மணிகண்டன்  என்பவா் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரைத் தாக்கும் விதமாகவும் நடந்து கொண்டது  சமூக வலைதளங்களில் வைரலாக  பரவியது. இதனைத் தொடா்ந்து, மணிகண்டன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.