நீலகிரி

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.67.59 லட்சம் உதவித் தொகை: ஆட்சியா் தகவல்

DIN

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று காலத்தில் 6,759 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.67 லட்சத்து 59,000 நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னா் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவி வழங்கி பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 உதவித் தொகையை அவா்களது வீடுகளுக்கே சென்று வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டிருந்தாா்.

இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் 6,759 மாற்றுத் திறனாளிகளுக்கு அவரவா் வீடுகளுக்குகே சென்று தலா ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவித் தொகையாக மொத்தம் ரூ.67 லட்சத்து 59,000 வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT