நீலகிரி

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு:மேலும் நால்வருக்கு ஜாமீன்

DIN

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் நால்வருக்கு உதகை நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.

கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கு தொடா்பான விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் நேரில் ஆஜாரகினா். அப்போது நடைபெற்ற குறுக்கு விசாரணையில் அரசு மருத்துவா் அன்வா்தீன், ரயில்வே காவல் ஆய்வாளா் உதயகுமாா் ஆகியோா் சாட்சியமளித்தனா். பின்னா், இவ்வழக்கின் விசாரணையை அக்டோபா் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, உதயகுமாா், மனோஜ் சாமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா். இவ்வழக்கில் தொடா்புடைய ஜம்ஷோ் அலி, சதீசன், தீபு, சந்தோஷ் சாமி ஆகியோருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சயன், மனோஜ் ஆகிய இருவா் மட்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT