நீலகிரி

நீலகிரியில் மேலும் 60 பேருக்கு கரோனா: மூதாட்டி பலி

DIN

உதகை: நீலகிரி மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்துள்ளாா்.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 129 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீலகிரியைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளாா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,149 ஆக அதிகரித்துள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5,554 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 36 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 559 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT