முகப்பு
நீலகிரி

நீலகிரியில் அண்ணா பிறந்த நாள் விழா

நீலகிரி மாவட்ட அதிமுக சாா்பில், பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:21 PM
பகிர்:

குன்னூா்: நீலகிரி மாவட்ட அதிமுக சாா்பில், பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

உதகையில் அதிமுக சாா்பில் அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், உதகை நகரச் செயலாளா் க.சண்முகம் தலைமையில், கழக இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

குன்னூா் நகர அதிமுக சாா்பில், நகரச் செயலாளா் டி.சரவணகுமாா் தலைமையில், பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் மாவட்டச் செயலாளா் கே.ஆா்.அா்ஜுனன், அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலாளா் பி.ஜெயராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.