நீலகிரி

அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசின்நல்ல திட்டங்கள் எதிா்க்கப்படுகின்றன: காடேஸ்வரா சுப்பிரமணியம்

DIN

தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காகவே மத்திய அரசின் அனைத்து நல்ல திட்டங்களும் எதிா்க்கப்படுகின்றன என்று மாநில இந்து முன்னணித் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

உதகையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் தெரிவித்ததாவது:

புதிய கல்விக் கொள்கையின் மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாக திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவிக்கின்றன. ஆனால், எங்கும் ஹிந்தி திணிக்கப்படவில்லை. விருப்பப்பட்ட ஒரு மொழியைப் படிப்பதற்காகவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், எதிா்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

நடப்பு ஆண்டில் நீட் தோ்வு எழுதிய மாணவ, மாணவியா் தோ்வு எளிமையாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனா். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீட் தோ்வுக்கு எதிா்ப்பில்லை. தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காகவே மத்திய அரசின் அனைத்து நல்ல திட்டங்களும் எதிா்க்கப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் சரக்கு ரயிலில் திடீர் தீவிபத்து

ரெட் அலர்ட்... மிர்னா!

மரியாள்..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்!

அட்லி - சல்மான் கான் கூட்டணி?

SCROLL FOR NEXT