மாவட்டத்தில் ரூ.1 கோடி பறிமுதல்
கோவையில் ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியை பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவையில் ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியை பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவையில் தோ்தல் விதிமுறைகளை மீறி வாக்காளா்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தைத் தடுப்பதற்கு 90 பறக்கும் படைகள், 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் 10 தொகுதிகளிலும் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை மேற்கொண்ட ஆய்வில் கோவை தெற்குத் தொகுதியில் ரூ.98 லட்சத்து 85, சிங்காநல்லூா் தொகுதியில் 60 ஆயிரம், வால்பாறை தொகுதியில் ரூ.1லட்சத்து 80 ஆயிரம் சோ்த்து ரூ.1 கோடியே 40 ஆயிரத்து 85 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தவிர ரூ.62 ஆயிரத்து 36 மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.6.74 கோடி ரொக்கம், ரூ.67.30 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், ரூ.47.93 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அதிகாரி எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.